search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டவாளம் சேதம்"

    • ஹில்குரோவ் ரெயில் நிலையத்தில் மலைரெயில் நிறுத்தப்பட்டது.
    • விடுமுறை தினம் என்பதால் ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    கோவை,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்தன.

    தற்போது மாவட்டம் முழுவதும் கடும் குளிரும், பனியும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தொடர் பனியால் மண்ஈரப்பதம் அதிகரித்து சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர்நோக்கி இன்று காலை 7 மணிக்கு மலைரெயில் புறப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ரெயில் குன்னூரை நோக்கி பயணமாகி கொண்டிருந்தது. இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெ யில் பாதையில் ஹில்குரோவ்-ரன்னிமேடு பகுதியில் பெரியபாறை ஒன்று உருண்டு வந்து ரெயில் பாதையில் விழுந்தது. இதனால் தண்ட வாளம் சேதம் அடைந்தது.

    இந்த தகவல் அறிந்ததும் குன்னூரில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பaவ இடத்திற்கு விரைந்து வந்து பாறையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, ரெயில் பாதையில் பாறை விழுந்த தகவல் அறிந்ததும், மலைரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அவர் மலை ரெயிலை ஹில்குரோவ் ரெயில் நிலையத்தில் நிறுத்தினார். மலைரெயில் பாதையில்பாறை விழுந்ததால் போக்குவரத்து தடை பட்டதால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். தொடர்ந்து பாறையை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    பணிகள் எவ்வளவு நேரத்தில் முடியும் என்பது தெரியவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் பணி முடிந்த பின்னர் ரெயிலை இயக்கலாமா? அல்லது பயணிகளை பஸ்சில் அனுப்பலாம் என்பது குறித்து ஆலோசிக்கின்றனர்.z

    ×